Wednesday, 21 November 2007

கருத்தரங்கும் கலந்துரையாடலும்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை
தீர்வும் வழிமுறையும்

காலம்:
8th December 2007 Saturday 3.30pm

இடம்:
London Muslim Centre, (4th Floor, Seminar suite)
82-92 Whitechapel Road, Whitechapal, London E1 1JX
(Nearest Tube Station: Whitechapall & Aldgate East)

தலைமை: Dr. ரயிஸ் முஸ்தபா

கெளரவ பேச்சாளர்:
உஸ்தாத் ரசீத் உறஜ்ஜுல் அக்பர்
(Ameer, Sri Lanka Jama’th E Islami)

சிறப்புப் பேச்சாளர்கள்:
வி சிவலிங்கம் (SLDF-London)
நஜாஉற் முஹமத் (The President, SLIF-UK)
நிர்மலா ராஜசிங்கம் (SLDF-London)

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
Seminar and Discussion
Jointly Organized by

Sri Lanka Democracy Forum (SLDF - London)
&
Sri Lanka Islamic Forum (SLIF) UK

All are welcome
Contacts:
07795 810 262, 07849 478 576

Wednesday, 31 October 2007

இலங்கையில் சமாதானமும் சமாதானத்திற்கான அடிப்படைகளும்



பொதுக் கூட்டம்

ரொறன்டோ, கனடா
நவம்பர் 10, சனிக்கிழமை

இடம்: Scarborough Civic Centre (McCowan & Ellesemere) 150 Borough Drive , Toronto


இலங்கையில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத விடயமாக தேசிய இனங்களின் பிரச்சனை இருந்து வருகின்றது. இது தீர்க்கப்படாத காரணத்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடுகின்றது. தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரை இன் நிலைமை தொடரும் என்பது சந்தேகமில்லை.

இன்நிலையில் இலங்கையில் தேசிய இனங்களின் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் ' சமாதானத்திற்கான கனேடியர்கள்' (Canadians for Peace) என்ற மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வித அரசியல் கட்சிகளின் சார்பும் இன்றி, கனடாவாழ் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு இலங்கையில் வாழும் தமிழர், முஸ்லீம், மலையக மக்களுக்கு நீதியான, கௌரவமான, நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கனடாவில் செயல்படத் தீர்மானித்துள்ளது.

இவ்வமைப்பின் முதலாவது பொதுக் கூட்டம் நவம்பர் 10, 2007 � மாலை 3.00 மணிக்கு ரொறன்டோ கனடாவில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர்களாக ஜேர்மனியில் சமாதானத்திற்காக இயங்கும் பரா குமாரசாமி அவர்களும், இலண்டனில் சமாதானத்திற்காக இயங்கும் உபாலி கூரே அவர்களும் கலந்து கொள்கின்றனர். கனடாவில் இருந்து பங்கு கொள்ளும் பேச்சாளர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகின்ற அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக செயல்படும். இதற்கான இவ்வமைப்பு பல திட்டங்களை வகுத்துள்ளது.


தொடர்புகளுக்கு: canadiansforpeace@gmail.com

செழியன்: chelian@rogers.com/416-792 2188
ரஞ்சித்: rsbandulahewa@gmail.com/416-621 0824