இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடத்தும் நூல் விமர்சன அரங்கு:
இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு:
“இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்”
தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும், சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னோடிகளில் ஒருவரும், இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இலங்கைத் தலித் மக்களின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியுமான மறைந்த தோழர். எம்.சி. சுப்பிரமணியத்தின் வாழ்வையும் பணியையும் ஆளுமையையும் சித்திரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு
“எம். சி : ஒரு சமூக விடுதலைப் போராளி”
வரலாற்றைப் போல சிறந்த ஆசான் வேறில்லை. சமகாலத் தலித் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குக் கடந்தகால தலித் மக்களின் போராட்ட வரலாறு குறிந்தும், முன்னோடித் தலித் தலைவர்கள் குறித்தும் ஆழமான வாசிப்பும் கூர்மையான விமர்சனப் பார்வையும் நமக்கு அவசியமானவை. சாதியொழிப்பில் அக்கறையுள்ள தோழர்கள் அனைவரையும் விமர்சன அரங்கில் கலந்து கொள்ளுமாறும் தொடரும் கலந்துரையாடலில் பங்கெடுக்குமாறும் அழைக்கிறோம்.
இடம்: QUAKERS MEETING HOUSE
BUSH ROAD, WANSTEAD
LONDON, E11 3AU.
நாள்: 06 டிசம்பர் 2008 சனி மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை
Sunday, 9 November 2008
லண்டனில் இரு ‘தலித்திய’ நூல்களின் விமர்சன அரங்கு
Posted by
Tamil Forum for Peace
at
20:44
Saturday, 11 October 2008
இலங்கையின் உள்நாட்டுப்போரும் பொருளாதாரமும் : பொதுக்கூட்டம்
இலங்கை ஜனநாயக ஒன்றியம் நடத்தும்
பொதுக்கூட்டம்
இலங்கையின் உள்நாட்டுப்போரும் பொருளாதாரமும்
வடகிழக்குப்பிரதேசங்களில் பிரத்தியேக நோக்குடன்
பேச்சாளர்: முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
(பிரதான ஆய்வாளர், பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனம்)
South Ruislip Methodist church,
Queens Walk, South Ruislip,
Middlesex HA4 0NL
சனிக்கிழமை 11 ஒக்டோபர் 2008
பி.ப 2.00 - பி.ப 5.00 வரை
(முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதான ஆய்வாளரும் இலங்கையில் நன்கறியப்பட்ட பொருளியல் நிபுணருமாவார். இவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இலங்கை அரசின் நிதி, திட்டமிடல் அமைச்சுக்கும் பொருளாதாரம், பொருளியல் திட்ட சீர்திருத்தம், பொருளாதாரம் மீது போரின் பாதிப்பு ஆகிய விடயங்கள் பற்றி ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். புராட்போர்ட் பல்கலைக்கழகம், ஐக்கியநாடுகளின் சமாதானக்கல்வித்துறை பற்றிய பயிலல்களில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பொருளாதாரமும் போரும், போர், பிள்ளைகள், பெண்கள், பொருளாதார வறுமை, சமத்துவமின்மை ஆகியவற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் பொதுவாக போரும் உள்நாட்டுப்போரும் என்ற விடயம் பற்றியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்; புத்தகங்களின் துணையாசிரியராக இருந்துள்ளார். கொன்டெம்பரரி சவுத் ஏசியா என்று ரவுட்லெட்ஜ் பிரசுரிக்கும் ஜேர்னலின் சர்வதேச நெறியாள்கைக்குழுவில் அங்கம் வகிக்கின்றார். தற்சமயம் புல்பிரைட் ஆய்வாளராக வாஷிங்டன் டி.சி.யின் ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் வரும் வருடம் பணிபுரியவுள்ளார்.)
Posted by
Tamil Forum for Peace
at
08:47
Labels: இலங்கையின் உள்நாட்டுப்போரும் பொருளாதாரமும் : பொதுக்கூட்டம்